வருடத்தின் நடுப்பகுதியில் பிரதமர் பதவியில் மாற்றம்..!
முன்னாள் அதிபர் மஹிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக நியமிக்க சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் பலர் தயாராகி வருவதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமண அண்மையில் அறிவித்திருந்தார்.
இது தொடர்பில் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“சிறிலங்கா பொதுஜன பெரமுனவினால் அதிபரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள உறுப்பினர்களுக்கு பிரதமரின் தலையீடு போதுமானதாக இல்லாத காரணத்தினால் இந்த பிரேரணை முன்வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் மீது குற்றம் சுமத்தியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்சவை பிரதமராக நியமிப்பதை தவிர வேறு வழியில்லை என தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், இந்த வருடத்தின் நடுப்பகுதியில் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்படலாம் என அரசியல் வட்டாரங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.