யாழ்தேவி தடம்புரள்வு!புகையிரத சேவை தொடர்பில் வெளியான தகவல்

யாழ்தேவி தடம்புரள்வு!புகையிரத சேவை தொடர்பில் வெளியான தகவல் | Colombo To Jaffna Train Service

மஹவ தொடருந்து நிலையத்திற்கு அருகில் தடைப்பட்டிருந்த வடக்கு புகையிரத சேவை தற்போது வழமைக்கு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனுராதபுரத்தில் இருந்து கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த யாழ்தேவிபுகையிரதத்தின் பெட்டி ஒன்று நேற்று பிற்பகல் தடம் புரண்டது.

இதன் காரணமாக இரண்டு மணித்தியாலங்களுக்கு மேல் புகையிரத சேவை தாமதமானதாக தொடருந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ்தேவி தடம்புரள்வு!புகையிரத சேவை தொடர்பில் வெளியான தகவல் | Colombo To Jaffna Train Service

இதேவேளை தடம் புரளாமல் இருந்த தொடருந்தின் முன்பெட்டிகளுக்கு பயணிகள் மாற்றப்பட்டு கொழும்பு கோட்டை நோக்கி அனுப்பி வைக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மஹவ புகையிரத நிலையத்திற்கு அருகில் உள்ள நிகவெரட்டிய மற்றும் மொரகொல்லாகம இடையிலான வீதியும் தடைபட்டது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button