இலங்கையில் ஆடை ஏற்றுமதியில் ஏற்பட்ட வீழ்ச்சி
கடந்த ஜனவரி மாதத்தில் இலங்கையின் ஆடை ஏற்றுமதி 18.8 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்துள்ளது.
கடந்த வருடம் ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட ஆடைகளின் வீதம் 1.2 சதவீதத்தினால் குறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த வருடத்தில் ஆடை ஏற்றுமதியில் இந்த காலப்பகுதியில் 478.9 மில்லியன் அமெரிக்க டொலர் வருமானம் ஈட்டப்பட்டிருந்தது.
இந்த வருடத்தில் ஆடை ஏற்றுமதியின் ஊடாக, 388.9 மில்லியன் அமெரிக்க டொலர் மாத்திரமே கிடைக்கப்பெற்றுள்ளது.
இதேவேளை, ஆடை மற்றும் அதனுடன் சார்ந்த இறக்குமதியும் கடந்த ஜனவரி மாதம் வீழ்ச்சியடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.