சாரதி பற்றாக்குறை காரணமாக இரத்து செய்யப்பட்ட தொடருந்து பயணங்கள்

சாரதி பற்றாக்குறை காரணமாக இரத்து செய்யப்பட்ட தொடருந்து பயணங்கள் | Train Time Table Sri Lanka Train Route

சாரதி பற்றாக்குறை காரணமாக இன்று (06) 24 தொடருந்து பயணங்கள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தொடருந்து பிரதி பொது முகாமையாளர் எம்.ஜே.இதிபோலகே தெரிவித்தார்.

அரச ஊழியர்களுக்கு 60 வயதில் ஓய்வு அளிக்கும் தீர்மானம் காரணமாக தொடருந்து சாரதிகளின் பற்றாக்குறை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து மேலும் கருத்து தெரிவித்த அவர்,

“சரக்கு தொடருந்துகள் மற்றும் நாவலப்பிட்டி, மாத்தளை, கண்டி, மஹவ, மட்டக்களப்பு போன்ற பல பிராந்திய தொடருந்துகளும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு 60 வயதில் ஓய்வு அளிக்கும் தீர்மானம் காரணமாக சுமார் 46 புகையிரத சாரதிகள் அண்மைக் காலத்தில் சேவையில் இருந்து ஓய்வு பெற்றுள்ளனர்.

அப்பிரச்சினைக்கு தீர்வாக 27 தொடருந்து சாரதிகள், 9 சாரதி உதவியாளர்கள் மற்றும் 23 தொடருந்து கட்டுப்பாட்டாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்குமாறு பொது சேவை ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கடந்த ஜனவரி மாதம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதிலும் இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை.

கொழும்பு மற்றும் மட்டக்களப்பு தொடருந்து சேவைகள் எதிர்வரும் புதன்கிழமைக்குள் வழமைக்கு திரும்பும்.

எனினும் சாரதிகள் பற்றாக்குறை காரணமாக கொழும்பில் இருந்து மட்டக்களப்பு வரை இயங்கும் உதயாதேவி தொடருந்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.” என தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button