பேருந்து கட்டண திருத்தம் தொடர்பில் வெளியான அறிவிப்பு
எதிர்வரும் ஜுலை மாதத்திலோ அல்லது அதற்கு முன்னதாகவோ பேருந்து கட்டணச் சலுகைகளை மக்களுக்கு வழங்க முடியும் என இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (06.03.2023) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துக்கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் கூறுகையில்,“இந்த நாட்களில் இடம்பெறும் தேர்தல் பேரணிகள் காரணமாக பேரூந்து தொழிற்துறைக்கு சாதகமான நிலைமை ஏற்பட்டுள்ளது.
2023 ஆம் ஆண்டில் இரண்டு மாதங்களும் சில நாட்கள் கடந்துவிட்டன. நாட்டில் இடம்பெற்ற போராட்டங்களால் எங்கள் பேருந்துகளுக்கு இப்போது கிட்டத்தட்ட 500 மில்லியன் ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த இழப்புக்களுக்கான நட்டயீட்டை பெற்றுத்தரும் நடவடிக்கைகளை மனித உரிமைகள் ஆணையம் செய்ய வேண்டும் அவ்வாறு செய்ய முடியாவிட்டால், மனித உரிமைகள் ஆணையம் மற்றும் காவல்துறைக்கு எதிராக நாங்கள் நிச்சயமாக நீதிமன்றத்தை நாட வேண்டியிருக்கும்.”என தெரிவித்துள்ளார்.