இலங்கை – நியூசிலாந்து முதல் டெஸ்ட் ஆரம்பம்!

இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி நியூசிலாந்தின் கிரிஸ்ட் சேர்ச்சில் இன்று ஆரம்பமாகியுள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பை தேர்ந்தெடுத்துள்ளது.

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடி வரும் இலங்கை அணி முதல் ஆட்டநேர முடிவில் நிறைவில் 6 விக்கெட்டுக்களை இழந்து 306 ஓட்டங்களைப் பெற்று துடுப்பெடுத்தாடி வருகிறது.

திமித் கருணாரத்ன 50 ஓட்டங்களையும், குசல் மெந்திஸ் 87 ஓட்டங்களையும் பெற்று ஆட்டமிழந்தனர்.

மேலும் தினேஸ் சந்திமால் 39 மற்றும் ஏஞ்சலோ மெத்திவ்ஸ் 47 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தனர். களத்தில் டீ சில்வா 39 ஓட்டங்களுடனும், கசன் ராஜித 16 ஓட்டங்களுடன் துடுப்பாடி வருகின்றனர்.

பந்து வீச்சில் டிம் சவுதி 2 விக்கெட்டுக்களையும், மெட் என்ரி ஒரு விக்கெட்டையும் கைப்பற்றியுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button