இலங்கை டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களால் படைக்கப்பட்ட மூன்று சாதனைகள்!

இலங்கை டெஸ்ட் துடுப்பாட்ட வீரர்களால் படைக்கப்பட்ட மூன்று சாதனைகள்! | Sri Lanka Vs New Zealand Test Match Record Today

உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரையொட்டி இலங்கை – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் தொடர் ஆரம்பமாகி உள்ளது.

அந்தவகையில், முதலாவது டெஸ்ட் போட்டி தற்சமயம் இடம்பெற்று வருகின்றது.

நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்சில் நடைபெற்று வரும் குறித்த போட்டியில் இலங்கை அணியின் வீரர்கள் மூவர் முக்கிய சாதனைகளை படைத்துள்ளனர்.

முதலாவதாக, நியூசிலாந்து மண்ணில் வெளிநாட்டு வீரர் ஒருவர் பெற்றுக்கொண்ட அதி வேக அரைச்சதம் எனும் சாதனையை குசல் மெண்டிஸ் தன்வசப்படுத்தியுள்ளார்.

அடுத்ததாக, இலங்கை டெஸ்ட் அணியின் தலைவர் திமுத் கருணாரத்ன 5980 ஓட்டங்களை பதிவு செய்து, இலங்கை அணியின் டெஸ்ட் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஒருவரால் பெறப்பட்ட அதிகபட்ச ஓட்டங்கள் எனும் சாதனையை படைத்துள்ளார்.

101 டெஸ்ட் போட்டியில் விளையாடும் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் ஏஞ்சலோ மெத்யூஸ் 7000 டெஸ்ட் ஓட்டங்களைக் கடந்துள்ளார், இதன்மூலம் 7000 டெஸ்ட் ஓட்டங்களை கடந்த மூன்றாவது இலங்கை வீரர் எனும் பெருமையைப் பெற்றுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button