நாடாளுமன்றத்தில் வெளியிடப்பட்ட ஓய்வூதியம் பெறும் முன்னாள் எம்.பிகளின் பட்டியல்
தற்போது ஓய்வூதியம் பெறும் ஓய்வுபெற்ற எம்.பி.க்களின் பட்டியலை நாடாளுமன்றம் வெளியிட்டுள்ளது.
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி மதுர விதானகே மற்றும் கருணாதாச கொடித்துவக்கு ஆகியோர் இதனை பதிவு செய்யுமாறு கோரியிருந்தனர்.
இதற்கமைய இன்று நாடாளுமன்றத்தினால் குறித்த பட்டியல் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அதுமட்டுமன்றி, போராட்டங்கள் அல்லது நாசவேலைகளில் ஈடுபடுபவர்கள், அடையாளம் காணப்பட்டு அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இவ்வாறு அரசாங்கத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுவோர் தொடர்பான பதிவுகள் கணனியில் குறிப்பேட்டு வடிவில் பராமரிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் தெரிவிக்கப்படுகின்றது.
அவ்வாறு அடையாளம் காணப்படும் நபர்கள் அரசுப் பணிகளுக்கு விண்ணப்பிக்கும் போது, அவர்கள் சம்பந்தப்பட்ட வேலைக்குத் தகுதியற்றவர்களாகக் கருதுவதற்கான அடிப்படை ஆவணம் தயாரிக்கப்படும் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.