பெரும்பான்மையுடன் புதிய பிரதமர் நியமனம்!
சீனாவின் புதிய பிரதமராக லீ கியாங் (Li Qiang) அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
புதிய பிரதமராகச் சீன பாராளுமன்றம் இன்று அவரை உறுதிப்படுத்தியது.
முன்னையப் பிரதமர் லீ கெச்சியாங்கின் இரண்டு தவணைப் பதவிக்காலம் நிறைவடைந்ததைத் தொடர்ந்து லீ கியாங் புதிய பிரதமராக அறிவிக்கப்பட்டிருக்கிறார்.
சீன பாராளுமன்றத்தில் இன்று அவருக்கு ஆதரவாக 2,936 பேர் வாக்களித்தனர்.
மூன்று பேர் அவரை எதிர்த்து வாக்களித்தனர். எட்டுப் பேர் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.