அரச ஊழியர்களுக்கே முதலில் சலுகை!
எதிர்காலத்தில் அரசாங்க வருமானம் அதிகரிக்கும் பட்சத்தில் அரச ஊழியர்களுக்கே முதலில் சலுகை வழங்கப்படும் என அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன, அரசு ஊழியர்களில் 10 சதவீதம் பேர் மட்டுமே இந்த வரி விதிப்பிற்கு உள்ளாகவுள்ளனர். ஏனைய 90 சதவீத அரசு ஊழியர்களுக்கு இந்த வரி இல்லை.
எனவே, அரசாங்க வருமானம் அதிகரித்தால், இந்த சீர்திருத்தங்கள் மூலம் முதலில் அரசு ஊழியர்களுக்கு சலுகை வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்.