இலங்கைக்கு எதிராக அதிரடியாக தடை விதித்த 197 நாடுகள்
இலங்கைக்கு எதிரான சர்வதேச கால்பந்து தடைக்கு ஆதரவாக 197 நாடுகள் வாக்களித்துள்ளன.
208 நாடுகளின் பங்குபற்றுதலுடன் ருவாண்டாவின் தலைநகர் கிகாலியில் உலக கால்பந்தாட்ட சம்மேளனத்தின் பொதுச்சபை கூட்டம் நடைபெற்ற போது இலங்கைக்கு எதிரான தடைச்சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இலங்கை விளையாட்டு அமைச்சின் முறையற்ற செல்வாக்கு, விளையாட்டின் சுதந்திரத்தை மீறுதல், புதிய விதிமுறைகளை தன்னிச்சையாக திணித்தல், நியாயமான தேர்தலை நடத்துவதற்கு ஒப்புக் கொள்ளப்பட்ட உத்தியோகபூர்வ தேர்தல் பாதை வரைபடத்தை ஒருதலைப்பட்சமாக மீறுதல் போன்றவற்றைக் கருத்தில் கொண்டு 197 நாடுகள் அந்த முடிவை எட்டியுள்ளன.
உலகில் பல நாடுகள் விளையாட்டுக்காக தமது விதிகள், மனித உரிமைகள் போன்றவற்றை மாற்றிக்கொண்டிருக்கும் இவ்வேளையில் இலங்கை, விளையாட்டுக்கு ஒத்துவராத புதிய கொள்கைகளை நடைமுறைப்படுத்துவது வருத்தமளிப்பதாக உலக நாடுகள் பலவும் கவலை தெரிவித்துள்ளன.
சர்வதேச நாணய நிதியம் போன்ற சர்வதேச நிறுவனங்கள் நல்ல மற்றும் சுதந்திரமான நிர்வாகம் மற்றும் மனித உரிமைகளைப் பாதுகாத்தல் போன்ற கொள்கைகளை எதிர்பார்க்கும் இவ்வேளையில், அரசியல் நோக்கங்களினூடாக விளையாட்டுத்துறையின் சுதந்திரத்தை பேண இலங்கையின் முயற்சியை உலக சமூகம் கண்டித்துள்ளது.
இந்த சர்வதேச கால்பந்து தடை காரணமாக, 2026 உலகக் கோப்பை தகுதிச் சுற்று, ஆசிய கோப்பை போட்டிகள் மற்றும் தெற்காசிய கோப்பை போட்டிகளிலும் கூட இலங்கை பங்கு பற்றும் வாய்ப்பை இழந்துள்ளது.
இதனால் இலங்கை தேசிய அணி 4 ஆண்டுகளுக்கு உலகக் கோப்பை போட்டிகளில் பங்குபற்ற முடியாது. அடுத்த தகுதிப் போட்டிகள் 2027 இல் இருக்கும்.
மேலும், 211 நாடுகளுக்கு வழங்க வேண்டிய மில்லியன் டொலர்களையும் இலங்கை இழந்துள்ளது.இந்த ஆண்டு உலக கால்பந்து கூட்டமைப்பு 7.6 பில்லியன் டொலர்களை வருமானமாக பெற்று சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம் நாடுகளுக்கு வழங்கப்படும் உதவிகளை 30% அதிகரிக்க இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த உதவி இலங்கை மற்றும் சிம்பாப்வேக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.