தபால் மூல வாக்களிப்பு மீண்டும் ஒத்திவைக்கப்படலாம்! தேர்தல் ஆணைக்குழு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மீண்டும் ஒத்திவைக்கப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்குச்சீட்டுகள் இதுவரை தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கவில்லை.
அதன் காரணமாக இம்மாத இறுதியில் தபால் மூல வாக்களிப்பை நடத்த முடியாது என தேர்தல் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தேர்தல் ஆணைக்குழு எதிர்வரும் செவ்வாய்கிழமை தபால் வாக்குச்சீட்டுகளை தொடர்புடைய வாக்களிப்பு நிலையங்களுக்கு வழங்கும் பொருட்டு தபால் திணைக்களத்திடம் ஒப்படைக்கத் திட்டமிட்டிருந்தது.
எனினும் இது வரை அரச அச்சகத்தில் இருந்து தபால் வாக்குச்சீட்டுகள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப்பெறவில்லை.
போதிய நிதி கிடைக்காத நிலைமையில் வாக்குச்சீட்டுகளை அச்சிட முடியாது என்று அரச அச்சக பணிப்பாளர் நாயகம் கங்கானி லியனகே நேற்று தேர்தல் ஆணைக்குழுவுக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.