கொரிய வேலைவாய்ப்பிற்குச் செல்வோரின் தொகை அதிகரிப்பு
அண்மைக்காலமாக கொரிய வேலைவாய்ப்புப் பெற்றுச் செல்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் அறிக்கையின்படி, இந்த ஆண்டு (2023) ஜனவரி மாதம் முதல் 1,678 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலைக்காகச் சென்றுள்ளனர்.
தென் கொரியா வேலைவாய்ப்புக்காக முதன்முறையாக 1398 பேர் சென்றுள்ளதாகவும், 280 பேர் சேவைக் காலம் முடிந்து அதே இடத்திற்குத் திரும்பியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் 1490 பேர் உற்பத்தித் துறைக்காகவும், 188 பேர் மீன்பிடித் துறைக்காகவும் சென்றுள்ளதாக வேலைவாய்ப்புப் பணியகம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்த குழுவில் 1,662 ஆண்களும் 16 பெண்களும் உள்ளடங்குவதாக தெரிவித்துள்ள வேலைவாய்ப்புப் பணியகம், இந்த ஆண்டு 6,500 இலங்கையர்களை தென் கொரியாவில் பணிக்கு அனுப்ப எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளது.