இலங்கையின் தோற்றத்தில் ஏற்படவுள்ள மாற்றம் – வெளியாகும் புதிய வரைபடம்
இலங்கையின் பரப்பளவு, நீளம் மற்றும் அகலம் தொடர்பான சமீபத்திய தரவு அறிக்கை 2 மாதங்களுக்குள் வெளியிடப்படும் என நில அளவையாளர் சிவானந்தராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான வரைப்படத்தில் பதிவிடும் பணிகள் கடந்த ஆண்டுகளில் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.
அதற்கமைய, தயாரிக்கப்பட்ட புதிய வரைபடத் தரவுகளுக்கமைய, நில அளவைத் துறையின் குழு புதிய கணக்கீடுகளைச் செய்யும் என்று அவர் கூறியுள்ளார்.
கொழும்பு துறைமுக நகரம் மற்றும் ஹம்பாந்தோட்டை துறைமுகம் போன்ற தனித்துவமான சூழ்நிலைகளால் நாட்டின் பரப்பளவு, நீளம் மற்றும் அகலம் மாற்றங்களுக்கு உட்பட்டுள்ளதனை இது வெளிப்படுத்தும்.
இலங்கையின் வடமுனையில் பருத்தித்துறை முதல் தெற்கே தேவந்தரா முனை வரையிலான நீளம் சுமார் 432 கிலோ மீற்றராகும்.
மேற்கில் கொழும்பிலிருந்து கிழக்கில் சங்கமன் கண்ட முனை வரையிலான இலங்கையின் அகலம் கிலோ மீற்றராகும். மேலும் இலங்கையின் அளவு 65,610 சதுர கிலோமீட்டர் எனவும், இலங்கையைச் சுற்றியுள்ள கடற்கரையின் நீளம் 1700 கிலோமீட்டரைத் தாண்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.