நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டது சட்டத்துறை விவகார வர்த்தமானி!

நாடாளுமன்றில் தோற்கடிக்கப்பட்டது கோட்டாபயவால் பிரகடனப்படுத்தப்பட்ட வர்த்தமானி! | Law Exam English Proposal In Parliament Defeated

இலங்கை சட்டக்கல்லூரியில் நடத்தப்படும் அனைத்து பாடநெறிகளும், பரீட்சைகளும் ஆங்கில மொழிமூலத்தில் நடத்தப்பட வேண்டும் என்ற பிரேரணை சிறிலங்கா நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சட்டக் கல்வி ஆணையத்தின் (அத்தியாயம் 276) கீழ் உள்ள விதிகளுக்கு அமைவாக, ஆதரவாக 1 வாக்கும், எதிராக 113 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சட்டக் கல்வியை ஆங்கிலத்தில் நடத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல், இன்றைய நாடாளுமன்ற அமர்வின் போது பெரும்பான்மை வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டது.

இந்த வர்த்தமானி அறிவித்தல் இன்று நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்ட போது, இந்த அறிவிப்புக்கு வாக்கெடுப்பு தேவை என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கோரியிருந்தார்.

அதன்படி வாக்கெடுப்பு நடைபெற்றது. அதில் வர்த்தமானி அறிவித்தலுக்கு எதிராக 113 வாக்குகளும் ஆதரவாக ஒரு வாக்கும் பதிவாகியிருந்தது. இந்த திட்டத்திற்கு ஆதரவு வழங்கியவர் நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி மட்டுமே எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button