புவியியல் தகவல் அமைப்புடன் இலங்கை போக்குவரத்து பேருந்துகளை இணைக்க முடிவு
புவியியல் தகவல் அமைப்பின் மூலம் பேருந்து பாதை வரைபடங்களை இணைத்துக் கொள்ளவதை நோக்கமாக கொண்ட புதிய முன்னோடித் திட்டம் ஒன்றை இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) அறிவித்துள்ளது.
குறித்த வேலைத் திட்டமானது இலங்கை போக்குவரத்து சபை பேருந்து பாதைகள் மற்றும் கால அட்டவணைகள் திறம்பட நிர்வகிப்பதற்கும் கண்காணிப்பதற்கும் இடமளிப்பதுடன், இத் திட்டத்தின் மூலம் இலங்கையின் பொது போக்குவரத்து சேவைகளின் தரம் மேலும் மேம்படுத்தப்படுகிறது.
இந்த முன்னோடித் திட்டத்தினால் பேருந்து வழித்தட வரைபடங்கள் GIS எனும் அமைப்பினால் ஒருங்கிணைக்கப்படும் மற்றும் SLTB அதன் போக்குவரத்து வலையமைப்பு குறித்து மிகவும் துல்லியமான விரிவான தகவல்களைப் பெறுவதற்கு உதவியாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், போக்குவரத்து நெரிசல் போன்ற சாத்தியமான பிரச்சினைகளை அடையாளம் காணவும் பேருந்து வழித்தடங்களின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான தீர்வுகளை உருவாக்கவும் போக்குவரத்துச் சபைக்கு இத் திட்டம் உதவுகிறது.
மேலும், இத்திட்டமானது பயணிகளுக்கு இலங்கை போக்குவரத்துச் சபையின் பேருந்து வழித்தடங்கள் மற்றும் அட்டவணைகள் பற்றிய பயனர் நட்பு வரைபடத்தை வழங்குவதுடன், அவர்களின் பயணங்களைத் திட்டமிட்டு திறமையாகப் பயணிப்பதற்கும் வசதியாக இருக்கின்றது.
பயண நேரத்தை குறைத்தல் தொடர்ந்து பேருந்து அட்டவணையை மேம்படுத்துதல் மற்றும் இறுதியில் பொது போக்குவரத்து சேவைகளின் ஒட்டுமொத்த தரத்தை அதிகரிப்பதுடன் பயணிகளுக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கும் நன்மைகளை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
புதிய முன்னோடி திட்டத்தின் மாதிரியை SLTB முகநூல் புத்தக பக்கத்தில் பகிரப்பட்டுள்ளன குறிப்பிடத்தக்கது.