விவசாயிகளுக்கு 30000 உதவித்தொகை – விவசாய அமைச்சு மகிழ்ச்சி தகவல்!
நாட்டில் ஒரு ஏக்கருக்கும் குறைந்த நிலப்பரப்பில் பயிர் செய்கை மேற்கொள்ளும் குறைந்த வருமானத்தை கொண்ட 48,000 விவசாயக் குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
குறித்த உதவித்தொகையை வழங்குவதற்கு சர்வதேச ஒத்துழைப்புக்கான யுனைடெட் ஸ்டேட்ஸ் ஏஜென்சி அல்லது USAID அமைப்பு தீர்மானித்துள்ளது.
அந்தவகையில், குறைந்த வருமானம் பெறும் விவசாயக் குடும்பங்களுக்கு 30000 ரூபா வழங்குவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த உதவித்தொகை இரண்டு தவணைகளில் 15000 ரூபா வீதம் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வழங்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இது முல்லைத்தீவு, வவுனியா, திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, மொனராகலை ஆகிய மாவட்டங்களில் உள்ள ஒரு ஏக்கருக்கும் குறைவாக நெல் பயிரிடும் விவசாயக் குடும்பங்களுக்கு வழங்கப்படவுள்ளது.