லாஃப் எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் வெளியான அறிவிப்பு
லாஃப் சமையல் எரிவாயுவின் விலையை குறைக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது.
லாஃப் சமையல் எரிவாயு நிறுவனத்தின் மூத்த அதிகாரி ஒருவர் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த விலை குறைப்பு நாளை (04.04.2023) நள்ளிரவு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி,12.5 கிலோ கிராம் எடையுடைய லாஃப் எரிவாயுவின் விலையை குறைக்க அந்நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேவேளை 5 கிலோ கிராம் மற்றும் 2.3 கிலோ கிராம் எடையுடைய லாஃப் எரிவாயுவின் விலையும் குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலக சந்தையில் எரிவாயுவின் விலை வீழ்ச்சி மற்றும் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணிகள் விலை குறைப்புக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.