தாதியர்களுக்கு கிடைத்த வெற்றி – நீதிமன்றம் வழங்கிய உத்தரவு
அரச சேவை ஐக்கிய தாதியர் சங்கம் உள்ளிட்ட குழுவினால் முன்வைக்கப்பட்ட மனுக்களை பரிசீலித்த மேன்முறையீட்டு நீதிமன்றம், தாதியர்களை 60 வயதிற்குள் கட்டாயமாக ஓய்வுபெறச் செய்வதற்கு அமைச்சரவையினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை நடைமுறைப்படுத்துவதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிமன்றம், நீதிபதி நிஷங்க பந்துல கருணாரத்ன மற்றும் ஏ. மரிக்கார் ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
அண்மையில் 60 வயதில் தாதியர்களுக்கு ஓய்வு அளிக்க அமைச்சரவை எடுத்த தீர்மானம் எதிரானது என மனுதாரர்கள் தெரிவித்துள்ளனர். அந்த மனுக்களில் 63 வயது வரை பணிபுரியும் திறன் கொண்டவை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.