இலங்கை கிரிக்கெட் வழக்கில் புதிய திருப்பம்!
அவுஸ்திரேலியாவில் வன்புணர்வு குற்றச்சாட்டு சுமத்தப்பட்ட இலங்கை அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவுக்கு சமூக வலைத்தளங்களை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
சிட்னியின் டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றில் அவர் இன்று (07) தனது பிணை நிபந்தனைகளை மாற்றுமாறு கோரி மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
இந்நிலையில் குறித்த பிணை நிபந்தனைகள் தளர்த்தப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தனுஷ்க குணதிலகவிற்கு மீண்டும் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகிய சமூக வலைத்தளங்களை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
20க்கு 20 உலகக்கிண்ண கிரிக்கட் போட்டிக்காக அவுஸ்திரேலியாவுக்கு சென்றிருந்த நிலையில், தனுஷ்க, பெண் ஒருவரை பலவந்தமாக பாலியல் உறவுக்கு உட்படுத்தியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இந்த முறைப்பாட்டின் அடிப்படையில் இலங்கை கிரிக்கெட் அணி தங்கியிருந்த ஹோட்டலில் வைத்து சிட்னி பொலிஸாரால் தனுஷ்க குணதிலக்க நவம்பர் 6 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்.
இதனை தொடர்ந்து அவர்,11 நாட்கள் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டிருந்த நிலையில் 2 இலட்சம் அவுஸ்திரேலிய டொலர் ரொக்கப் பிணையில் நவம்பர் 17 ஆம் திகதி விடுவிக்கப்பட்டார்.