இலங்கையில் கடன் அட்டைகள் பயன்பாட்டில் மாற்றம்!
2023 ஆம் ஆண்டின் முதல் இரு மாதங்களில், நாட்டில் கடன் அட்டைகள் (Credit Card) பயன்பாட்டில் குறிப்பிடத்தக்க குறைவாக பதிவாகியுள்ளது.
கடந்த ஆண்டு (2022) டிசம்பர் மாத இறுதியில் இலங்கையில் செயலில் உள்ள கடன் அட்டைகளின் மொத்த எண்ணிக்கை 1,952,991 ஆக பதிவாகியுள்ளது.
இந்தாண்டு ஜனவரி மாதம் 1,942,272 ஆகவும், 2023 பெப்ரவரி மாதம் 1,940,872 ஆகவும் வீழ்ச்சியடைந்துள்ளது.
இலங்கை மத்திய வங்கியினால் சமீபத்திய வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.