இலங்கையில் வெற்றிலை உண்போருக்கு அதிர்ச்சி தகவல்! ஆய்வில் வெளியான விடயம்

இலங்கையில் வெற்றிலை உண்போருக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஆய்வு தகவலொன்று வெளியாகியுள்ளது.

அதன்படி வெற்றிலையோடு பயன்படுத்தப்படும் இளஞ்சிவப்பு நிற சுண்ணாம்பில் ‘ரோடமைன் பி’ என்ற புற்றுநோயை உண்டாக்கும் சேர்மம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயம் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழு நடத்திய சோதனையிலிருந்து தெரியவந்துள்ளது.

இலங்கையில் வெற்றிலை உண்போருக்கு அதிர்ச்சி தகவல்! ஆய்வில் வெளியான விடயம் | Betel Leaves Eaters In Sri Lanka

நாடளாவிய ரீதியில் பல்வேறு பகுதிகளில் இருந்து பெறப்பட்ட 48 வெற்றிலை பொதி மாதிரிகள் இந்த ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில் இளஞ்சிவப்பு நிற சுண்ணாம்பில் புற்று நோயை உண்டாக்கும் இரசாயனம் அதிகம் உள்ளதாக தெரியவந்துள்ளது.

ரோடமைன் பி என்பது ஆடை மற்றும் காகித அச்சிடும் தொழில்களில் நிறமியாகப் பயன்படுத்தப்படும் ஒரு பொருளாகும் தெரியவருகிறது.

மேலும் இது களைக்கொல்லிகளை நிறமாற்றம் செய்யப் பயன்படுத்தப்படும் செயற்கை சாய இரசாயனமாகும்.

எனவே, உண்ணக்கூடிய சுண்ணாம்பில் நிறத்தை மாற்ற இதுபோன்ற இரசாயனத்தைப் பயன்படுத்துவது கடுமையான சமூகக் குற்றம் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button