இந்தோனேசியாவை அடுத்தடுத்து தாக்கியுள்ள இரு பாரிய நில நடுக்கங்கள்!
இந்தோனேசியாவில் இன்றைய தினம்(23) இரு பாரிய நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) கூறியுள்ளது.
முதலாவது நில அதிர்வானது, அதிகாலை 6.1 மெக்னிடியூட் அளவில் ஏற்பட்டு கெபுலாவான் பட்டுவைத் (Kepulauan Batu) தாக்கியுள்ளது.
அடுத்த சில மணிநேரங்களுக்குப் பிறகு 5.8 மெக்னிடியூட் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
முதலாவது நில அதிர்வானது 43 கிலோமீற்றர் ஆழத்திலும், இரண்டாவது நில அதிர்வானது 40 கிலோமீற்றர் ஆழத்திலும் ஏற்பட்டதாக EMSC கூறியுள்ளது.
இதன்போது ஏற்பட்ட சேதங்கள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை இதுவரை வெளியவில்லை.