பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக கடும் வீழ்ச்சியை சந்திக்கும் இலங்கை ரூபா

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக கடும் வீழ்ச்சியை சந்திக்கும் இலங்கை ரூபா | Dollar Rate In Sri Lanka

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி தொடர்பில் மத்திய வங்கி தகவல் வெளியிட்டுள்ளது.

இதன்படி, நேற்றுடன் ஒப்பிடும் போது டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி இன்றையதினமும்  வீழ்ச்சியடைந்துள்ளது. அத்துடன் பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராகவும் ரூபாவின் பெறுமதி கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றது.

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய(27.04.2023) நாணய மாற்று விகிதங்களின்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 328.77 ரூபாவாகவும், கொள்வனவு விலை 313.83 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இந்தநிலையில் ஸ்டெர்லிங் பவுண்டிற்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் சிறு வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இதேவேளை, யூரோவுக்கு எதிராக ரூபாவின் மதிப்பிலும் சிறு வீழ்ச்சி பதிவாகியுள்ளதுடன், பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக ரூபாவின் மதிப்பு தளம்பல் நிலையில் உள்ளது.

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 364.72 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 345.98 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அதேசமயம், ஸ்டெர்லிங் பவுண்டின் இன்றைய விற்பனை பெறுமதி 411.25 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 390.79 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button