இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று!
இந்த ஆண்டின் முதல் சந்திர கிரகணம் இன்று (05.05.2023) வெள்ளிக்கிழமை சித்திரா பௌர்ணமியன்று ஏற்படும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் துறையின் வானியல் மற்றும் விண்வெளி விஞ்ஞான பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த சந்திர கிரகணம் இலங்கை நேரப்படி இன்று இரவு 8.44 மணிக்கு ஆரம்பமாகி நாளை அதிகாலை 1.01 மணிக்கு நிறைவடையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இந்த சந்திர கிரகணத்தை வெற்றுக் கண்ணால் பார்ப்பது மிகவும் கடினம்.
ஐரோப்பா, ஆசியா, ஆஸ்திரேலியா, ஆபிரிக்கா, பசுபிக், அட்லாண்டிக், இந்தியப் பெருங்கடல் மற்றும் அண்டார்டிகா ஆகிய கண்டங்களில் இந்த சந்திர கிரகணங்கள் தெரியும் என்றும் சந்தன ஜயரத்ன குறிப்பிட்டுள்ளார்.