இந்திய விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் அதிகரிப்பு!
இந்தியாவின் சர்வதேச விமான நிலையங்களின் உள்ளூர் மற்றும் சர்வதேச பயணிகளுக்கான விமான நிலைய மேம்பாட்டு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்திய மத்திய விமான நிலைய பொருளாதார ஒழுங்குமுறை ஆணையகம் இதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தக் கட்டணமானது ஒவ்வொரு விமான நிலையத்துக்கும் மாறுபட்டதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய சென்னை, ஐதராபாத், பெங்களூர், மும்பை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட சர்வதேச விமான நிலையங்களில் இந்த கட்டணங்கள் அறவிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.