நாட்டின் வங்கி முறையின் ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்படும்: மத்திய வங்கியின் ஆளுநர்
எந்த வகையான உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டாலும் நாட்டின் வங்கி முறையின் ஸ்திரத்தன்மை பாதுகாக்கப்படும் என்று இலங்கையின் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க உறுதியளித்துள்ளார்.
மத்திய வங்கியின் 2022ஆம் ஆண்டறிக்கை பொது விரிவுரையின் போது இதனை வலியுறுத்தியுள்ளார். மேலும் அவர் தெரிவிக்கையில்,
குறிப்பாக பொது வைப்புத்தொகையின் ஸ்த்திரத்தன்மை மற்றும் வங்கி அமைப்பின் ஸ்திரத்தன்மை குறித்து நிறைய ஊகங்கள் மற்றும் கதைகள் தெரிவிக்கப்படுகின்றன.
மத்திய வங்கியின் முக்கிய நோக்கங்களில் ஒன்று வங்கி அமைப்பு ஸ்திரத்தன்மையைப் பேணுவதும் பொது வைப்புக்களை பாதுகாப்பதுமாகும்.
இதேவேளை நான்காம் காலாண்டின் இறுதியில் ஒற்றை இலக்கமாக இருக்கும் பணவீக்கம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் வட்டி விகிதங்களும் இயல்பாக்கப்படும் என்று நம்புவதாகவும் தெரிவித்துள்ளார்.