எதிர்பார்த்ததை விட மிக வேகமாக பதிவாகும் வீழ்ச்சி!
எதிர்பார்க்கப்பட்டதை விடவும் மிக வேகமாக பணவீக்கம் வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், அதற்கு சமாந்தரமாக வட்டி வீதங்களும் வீழ்ச்சியடையுமென இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க எதிர்வு கூறியுள்ளார்.
கொழும்பில் நேற்றுமுன் தினம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பொருளியல் கருத்தரங்கு ஒன்றில் உரையாற்றிய ஆளுநர் நந்தலால் வீரசிங்க, “பணவீக்கம் நாம் எதிர்பார்த்ததை விடவும் மிக வேகமாக வீழ்ச்சியடைந்து வருகிறது.
அனுடன் இணைந்ததாக உயர் மட்டத்தில் காணப்பட்ட வட்டி வீதங்கள் தற்போது வீழ்ச்சியடைந்து வருகின்றன” என சுட்டிக்காட்டியுள்ளார்.
அது மாத்திரமன்றி கடன் மறுசீரமைப்புச் செயன்முறை தொடர்பில் முழுமையாக அறிவித்ததன் பின்னர் சந்தை வட்டி வீதங்கள் மேலும் விரைவாக வீழ்ச்சியடையுமென எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.