வடக்கு மாகாண பாடசாலைகளில் இடைவிலகிய மாணவர்களின் விபரங்களை கோரிய ஆளுநர்.

வடக்கு மாகாண பாடசாலைகளில் இடைவிலகிய மாணவர்களின் விபரங்களை கோரிய ஆளுநர் | Governor Requested Details Of Students Northern

வடக்கு மாகாண பாடசாலைகளில் இருந்து இடை விலகிய மாணவர்களின் விபரங்களை வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஊடாகத் தமக்கு அனுப்பி வைக்குமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பணிப்புரை விடுத்துள்ளார்.

யாழ்.மாவட்ட அபிவிருத்தி கலந்துரையாடலில் முன்வைக்கப்பட்ட கோரிக்கை தொடர்பில் அவர் அனுப்பி வைத்த ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு மாகாண பாடசாலை மாணவர்கள் இடைவிலகுவது அல்லது கட்டாய விடுகைப் பத்திரம் வழங்குவது தொடர்பில் உரிய அதிகாரிகளின் தலையீடு பின்பற்றப்பட்டிருக்க வேண்டும்.

இதேவேளை பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்கள் சமூகத்தில் என்ன செய்கிறார்கள் என்பது தொடர்பில் அவதானிப்புக்கள் இடம்பெற்றிருக்க வேண்டும்.

ஆகவே கடந்த மூன்று வருடங்களில் பாடசாலைகளில் இருந்து இடைவிலகிய மாணவர்களின் பெயர் பட்டியலை தமக்கு அனுப்பி வைக்குமாறு ஆளுநர் சகல வலையக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் பணிப்புரை விடுத்துள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button