15 நாட்களில் ‘சென்னை – இலங்கை கப்பல் சேவை’
சென்னை துறைமுகத்தில் இருந்து இலங்கைக்கு கப்பல் இயக்குவது தொடர்பாக கார்டிலியா என்ற நிறுவனத்திற்கு அனுமதி கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிறுவனத்தின் எம்பிரஸ் என்ற பயணியர் கப்பல், சென்னையில் இருந்து ஜூன் 5ஆம் திகதி முதல், இலங்கைக்கான பயண சேவையை ஆரம்பிக்கவுள்ளது.
இந்தக் கப்பலானது ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, காங்கேசன்துறை, யாழ்ப்பாணம், கொழும்பு உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லவிருக்கிறது.
மூன்று நாள் பக்கேஜில் பயணிக்க, தம்பதிக்கு 85 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் வசூலிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் இருந்து 24 மணி நேரத்திற்குள், இந்தப் கப்பல் இலங்கையின் பல்வேறு துறைமுகங்களுக்கு சென்று வரவுள்ளது.
சென்னை துறைமுகத்தின் 7ஆவது நுழைவாயில் வழியாக, பயணியர் அனுமதிக்கப்பட உள்ளனர்.
இந்த கப்பலில், ஒரே நேரத்தில் 1, 600 பேர் வரை பயணிக்க முடியும்.