நாட்டில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய பொறிமுறை!

நாட்டில் இன்று முதல் நடைமுறைக்கு வரும் புதிய பொறிமுறை! | Dengue Prevalence Ministry Of Health

நுளம்புகளை அழிப்பதற்கு புதிய பொறிமுறை ஒன்று இன்று(21.05.2023) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய அணுக முடியாத இடங்களில், நுளம்புகளை அழிப்பதற்காக ட்ரோன் கருவிகள் மற்றும் ‘மொஸ்கிடோ டன்க்’ என்ற இரசாயனம் என்பவற்றை பயன்படுத்தும் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 35 ஆயிரத்து 283 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

அவர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளாந்தம் சுமார் 400 டெங்கு நோயாளர்கள் பதிவாகின்றனர்.

நாடாளாவிய ரீதியில் உள்ள 370 பொது சுகாதார சேவை பிரிவுகளில், 39 சுகாதார சேவை பிரிவுகள் அதிக அவதானம் மிக்க பகுதிகளாக அடையாளம் காணப்படட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

எனவே, டெங்கு நோயை கட்டுப்படுத்த தங்களது சுற்றுப்புற பகுதிகளை தூய்மையாக வைத்திருக்குமாறு சுகாதாரத்துறை அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button