இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் அதிகரிக்கும் சாத்தியம்!
இலங்கையின் பொருளாதாரம் இந்த ஆண்டின் இறுதிக் காலாண்டில் வலுவடையுமென நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார்.
தெஹியோவிட்ட பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனை கூறியுள்ளார்.
சர்வதேச நாணய நிதியம் பல்வேறு கணிப்புகளை முன்வைத்த போதிலும், அத்தகைய கணிப்புகளுக்கு அப்பால் நாட்டின் பொருளாதாரத்தை கடந்த வருடமும் நிர்வகிக்க முடிந்ததாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையின் இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி மறை 4.2 வீதமென உலக வங்கி அறிவித்திருந்த நிலையில், அது மறை 3.0 ஆக இருக்குமென சர்வதேச நாணய நிதியம் கணித்திருந்தது.
எனினும், இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் மறை 2 அல்லது 3 க்கு இடையில் இருக்குமென மத்திய வங்கி தெரிவித்திருந்தது.
இந்த நிலையில், உள்ளூர் உற்பத்திக்கான பங்களிப்பை அதிகரிக்க அனைவரும் உறுதியுடன் செயற்பட்டால், வருடத்தின் இறுதிக் காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதம் சாதகமானதாக அமையுமென ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய கூறியுள்ளார்.