டெங்கு நோயாளர்களுக்கு தடுப்பூசி வழங்கும் புதிய முறை அறிமுகம்
டெங்கு நோயாளர்களுக்குத் தடுப்பூசி வழங்கும் புதிய முறை அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி இந்த தடுப்பூசி வழங்கும் புதிய முறை இன்றைய தினம் (28.06.2023) அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முறையின் மூலம் நோயாளர்கள் பதிவாகும் பகுதிகளைக் கண்காணித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க முடியும் என அதன் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த வருடத்தின் இதுவரையான காலப் பகுதியில் நாடளாவிய ரீதியில் 48, 246 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கம்பஹா மாவட்டத்தில் 10,626 டெங்கு நோயாளர்களும் கொழும்பு மாவட்டத்தில் 10,316 டெங்கு நோயாளர்களும் பதிவாகியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.