வட்டியில்லா கல்விக்கடன் விண்ணப்பங்கள் கோரல்

வட்டியில்லா கல்விக்கடன் விண்ணப்பங்கள் கோரல்

வட்டியில்லா கல்விக்கடன் திட்டத்திற்கான 7ஆம் கட்ட விண்ணப்பங்கள் கோரும் காலம் ஜூலை 04 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்களை 07.08.2023 வரை அனுப்பலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்காக 2019/2020/2021 ஆண்டுகளில் இலங்கைப் பரீட்சை திணைக்களத்தினால் நடத்தப்பட்ட கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் தகுதியானவர்கள் என தொிவிக்கப்பட்டுள்ளது.

http://www.studentloans.mohe.gov.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பங்களை இணையத்தில் சமர்ப்பிக்க முடியும் என்பதோடு, குறித்த இணையத்தளத்திற்குள் பிரவேசித்து வட்டியில்லா மாணவர் கடன் திட்டத்திற்கான மாணவர் கையேட்டைப் பரிசீலனை செய்து அனைத்து தகவல்களை பெற முடியும்

அத்துடன் 070-3555970-79 என்ற தொலைபேசி எண்ணிற்கு அழைத்து மேலதிக தகவல்களை பெறலாம் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button