கிராம சேவகர்கள் ஜே.பி யாக கடமையாற்ற முடியும் – வர்த்தமானி வெளியீடு
இலங்கையில் உள்ள கிராம சேவகர்கள் தற்போது சமாதான நீதவானின் பணிகளை பிரதிநிதித்துவப்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில் வெளியான வர்த்தமானி அறிவித்தலின்படி இந்த அறிவித்தல் வழங்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு பிரதேச செயலக பிரிவிலும் உள்ள கிராம உத்தியோகத்தரும் இலங்கை குடியரசின் சமாதான நீதவான்களாக கடமையாற்ற வேண்டும்” என்று அந்த வர்த்தமானி அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இந்த நடைமுறையானது, அரசியலமைப்புச் சீர்திருத்த அமைச்சரால் 1978 ஆம் ஆண்டின் எண். 2, நீதித்துறைச் சட்டத்தின் பிரிவு 45 (1a) உடன் 61வது பிரிவின் கீழ் வாசிக்கப்பட்டது.