மெட்டாவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை: டுவிட்டருக்கு போட்டியான புதிய செயலி
மெட்டா நிறுவனம் அறிமுகப்படுத்திய த்ரெட்ஸ் செயலிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்ட உள்ளதாக ட்விட்டர் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மாஸ்க் அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் கருத்து தெரிவித்துள்ள எலோன் மாஸ்க், ‘போட்டி நல்லது, மோசடி மோசமானது’ என்று குறிப்பிட்டுள்ளார்.
மெட்டா தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கிற்கு, ட்விட்டரின் சட்டத்தரணி அலெக்ஸ் ஸ்பிரோ அனுப்பியுள்ள கடிதத்தில் ‘அறிவுசார் சொத்து’ மோசடியாகவும், சட்டவிரோதமாக மற்றும் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
ட்விட்டர் நிறுவனத்தின் வர்த்தக இரகசியங்கள் மற்றும் மிகவும் இரகசியமான தகவல்களை அறிந்த முன்னாள் ட்விட்டர் ஊழியர்களை மெட்டா நிறுவனம் பணியமர்த்தியுள்ளதாக அந்தக் கடிதத்தில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
ஆனால் சட்டப்பூர்வ கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக, முன்னாள் ட்விட்டர் ஊழியர்கள் த்ரெட்ஸ் கருவியை உருவாக்க உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளை மறுப்பதாக மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
த்ரெட்ஸ் செயலி ட்விட்டரைப் போலவே பயனர் நட்புக் செயலி என்று மெட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது.
நேற்று அறிமுகம் செய்யப்பட்ட த்ரெட்ஸ் செயலியில் இணைந்துள்ள பயனர்களின் எண்ணிக்கை தற்போது 30 மில்லியனைத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் பயன்பாட்டை விட பயனர்களுக்கு மிகவும் வசதியானது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.