இலங்கைக்கு உதவ தயாராகும் நியூசிலாந்து.
ஆசிய பசுபிக் வலயத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஜனநாயகத்தை கொண்ட நாடுகளாக இலங்கை, நியூலாந்து என்பனவற்றை குறிப்பிட முடியும் என்று பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளர்.
இலங்கைக்கான நியூசிலாந்து உயர்ஸ்தானிகராலயத்தை நேற்று திறந்து வைக்கும் நிகழ்வில் அவர் இது பற்றி கருத்து வெளியிட்டார்.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலவிய காலப்பகுதியில் நியூசிலாந்து வழங்கிய ஒத்துழைப்புக்களையும் பிரதமர் நன்றியோடு நினைவு கூர்ந்தார்.
இலங்கை, நியூசிலாந்தின் நீண்டகால நட்பு நாடாகும் என்று நிகழ்வில் உரையாற்றிய நியூசிலாந்து உயர்ஸ்தானிகர் மைக்கல் அப்பெல்டன் தெரிவித்தார்.
அரச நிதி முகாமைத்துவத்திற்கு முக்கியத்துவம் அளித்து பல்வேறு துறைகளிலும் இலங்கைக்கு உதவத் தயார் என்று அவர் கூறினார்.