பதில் அமைச்சர்களாக ஐவர் நியமனம்.
அதிபர் ரணில் விக்ரமசிங்க இரண்டு நாள் உத்தியோகபூர்வ பயணமாக இன்று (20) பிற்பகல் இந்தியா செல்லவுள்ளார்.
அதிபர் வெளிநாட்டில் தங்கியிருக்கும் காலப்பகுதியில் அவருக்கு கீழ் இருந்த அமைச்சுக்களை மேற்பார்வையிட அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி இராஜாங்க அமைச்சர்களான பிரமித பண்டார தென்னகோன் பாதுகாப்பு அமைச்சராகவும், ஷெஹான் சேமசிங்க நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம முதலீட்டு ஊக்குவிப்பு பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தொழில்நுட்ப பதில் அமைச்சராகவும், இராஜாங்க அமைச்சர் அனுபா பாஸ்குவல் பெண்கள், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக வலுவூட்டல் பதில் அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.