தேங்காய் எண்ணெய் இறக்குமதியினால் ஏற்பட்டுள்ள சிக்கல்!
தேங்காய் எண்ணெய் இறக்குமதியாளர்களிடம் இருந்து 200 ரூபா வரி அறவிடுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், வெளிநாடுகளில் இருந்து பாரியளவில் தேங்காய் எண்ணெய் இறக்குமதி செய்யப்படுவதால் சுமார் 200 உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தி தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக குருநாகல் மாவட்ட உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் (21) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், நாட்டில் உற்பத்தியாகும் தேங்காய் எண்ணெய் உள்ளூர் தேவைகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் போதாது எனவும், இதனால் போதியளவு தேங்காய் எண்ணெயை நாடு இறக்குமதி செய்ய வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்ளூர் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளரை பாதுகாக்கும் பணி சிறப்பாக நடந்து வருவதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.