சுற்றுலா பயணிகளின் சேவை வழங்குநர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு
அனுமதியின்றி சுற்றுலாப் பயணிகளுக்கு சேவையளிப்போருக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமென சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளார்.
சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் உதவிப்பணிப்பாளர் அனுப ரணவீர இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், அனுமதிப்பத்திரம் இன்றி சுற்றுலா வழிகாட்டிகளாக செயற்படுவோர் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் அனுமதிப்பத்திரங்களை புதுப்பிக்காத சுற்றுலா வழிகாட்டிகளும் அடங்குகின்றனர் எனவும் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கை தொடர்பில் விசேட சோதனை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதுடன், அவர்களுக்கு முதல்முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு செயற்படுபவர்களுக்கு கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.