குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கான புதிய கிராமப்புற வீடுகளுக்கான திட்டம்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சுடன் இணைந்து தனியார் முதலீட்டின் மூலம் ரூஃப் டாப் சோலார் கொண்ட 25,000 புதிய கிராமப்புற வீடுகளுக்கான திட்டம் நேற்றைய தினம் (27) விவாதிக்கப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
முதலீட்டின் மூலம் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு புதிய வீடுகளை அமைத்து கொடுப்பதே இத்திட்டத்தின் பிரதானமான நோக்கமாகும்.
அத்துடன், ரூஃப் டாப் சோலாரை கட்டத்திற்கு நிறுவவுவதன் மூலமாக எரிசக்தி செலவை மீட்டெடுக்கவும் இந்த முதலீடு திட்டமிட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
இக்கலந்துரையாடலில், முதலீடு, கட்டுமானம் மற்றும் செயல்படுத்துவதற்கான மாதிரி போன்ற விடயங்கள் தொடர்பில் விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.