எலான் மஸ்கின் புதிய திட்டம் – சீனாவின் வீ சாட் போல மாறும் டுவிட்டர்

எலான் மஸ்கின் புதிய திட்டம் - சீனாவின் வீ சாட் போல மாறும் டுவிட்டர் | Twitter Will Now Host All Services Elon Musk

டுவிட்டரில் விரிவான தகவல் தொடர்புகளையும், முழுமையான நிதி பயன்பாடுகளையும் பூர்த்தி செய்யும் திறன்களை அறிமுகம் செய்யப் போவதாக எலான் மஸ்க் தனது டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், இந்த வாரத் தொடக்கத்தில் அவர் டுவிட்டரின் லோகோவை ‘எக்ஸ்’ (X) என மாற்றியுள்ளார்.

இந்நகர்வு சீனாவின் மெகா செயலியான வீ சாட் போன்ற வடிவத்தைப் பின்பற்றுவதற்கான திட்டத்தின் முன்னெட்டுப்பாகக் கருதப்பட்டுகிறது.

அத்துடன் டுவிட்டர் தளத்திலும் சீனாவின் வீ சாட் போன்றதான அமைப்பை கொண்டு வர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.

சாட்டிங், டேட்டி, பணப் பரிவர்த்தனை என அனைத்துப் பயன்பாடுகளும் ஒரே செயலியில் அடங்கிய ஒன்றாக சீனாவின் வீ சாட் காணப்படுகின்றது.

இதற்கு ஏற்கனவே மஸ்க் பாராட்டுகளை தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கதாகும்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button