இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு நாணயம்!

இலங்கையில் அங்கீகரிக்கப்பட்ட அந்நியச் செலாவணி அலகாக மாற்றப்பட்டுள்ள வெளிநாட்டு நாணயம் | Sri Lanka Rupees Valuve And Indian Rupee Exchange

இந்திய ரூபா மூலம் நாட்டில் நேரடி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியாது என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில், இந்திய ரூபா அங்கீகரிக்கப்பட்ட அந்நியச் செலாவணி அலகாக மாத்திரம் இலங்கையில் மாற்றப்பட்டுள்ளது. அதன்படி, இந்திய ரூபாவானது நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட 16ஆவது வெளிநாட்டு நாணய அலகு ஆகும்.

எவ்வாறாயினும், இலங்கை ரூபாவிற்கு பதிலாக இந்திய ரூபாவானது நாட்டில் பரிவர்த்தனை செய்யக் கூடிய நாணயமாக மாறாது. இந்திய ரூபா மூலம் நாட்டில் நேரடி கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள முடியாது.

நாட்டில் அங்கீகரிக்கப்பட்ட வெளிநாட்டு நாணய அலகாக இந்திய ரூபாயை அறிமுகப்படுத்தியதன் மூலம் சட்டப்பூர்வ பணப்பரிமாற்ற புள்ளியில் இந்திய ரூபாவை இலங்கை ரூபாவிற்கு நேரடியாக மாற்ற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button