மொட்டு எம்.பிக்களை இணைத்துகொண்டு பாரிய கூட்டணி: சஜித்தின் புதிய வியூகம்
மொட்டு கட்சியில் அதிருப்தியடைந்த எம்.பிக்களை இணைத்துக்கொண்டு பாரிய கூட்டணி ஒன்றை அமைப்பதற்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தீர்மானித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில், ஒரு சில நாட்களுக்கு முன் மொட்டுக் கட்சியின் முக்கிய எம்.பி. ஒருவர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளார்.
அவ்வாறு அவர் தொலைபேசி அழைப்பு விடுத்துள்ளதன் நோக்கம், அவருடன் சேர்ந்து 15 எம்.பிக்கள் அரசுடன் அதிருப்தியடைந்திருப்பதாகவும், எதிர்க்கட்சியில் இணைவதற்குத் தயாராக இருப்பதாகவும் சஜித்திடம் தகவல் சொல்வதற்கே.
“சேர்… உங்களது கட்சியில் இணைய முடியுமா…? என்று சஜித்திடம் அவர் கேட்டுள்ளார்.
“முடியும். விரைவில் பாரிய கூட்டணி ஒன்றை அமைக்கப் போகின்றோம். அதில் இணையுங்கள். ஏற்கனவே மொட்டில் இருந்து விலகிய 13 எம்.பிக்கள் சுயாதீனமாக இயங்குவதோடு எம்மோடும் சேர்ந்து செயற்படுகின்றார்கள். அவ்வாறு நீங்களும் செயற்பட முடியும்” என்று சஜித் பதிலளித்துள்ளார்.