ராடர் திட்டம் தோல்வி – அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட இழப்பீட்டுத்தொகை
பொதுக் கணக்குகளுக்கான குழுவினால் சிறிலங்கா அரசாங்கத்திற்கு 78 மில்லியன் ரூபாவினை நிதி ஒதுக்கீடாக வழங்கப்பட்டுள்ளது.
உலக வானிலை அமைப்பின் ஆதரவுடன் கோங்கலா பகுதியில் ராடர் அமைப்பை நிர்மாணிக்கும் திட்டம் தோல்வி அடைந்ததனாலேயே குறித்த இழப்பீட்டுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
ஓகஸ்ட் 10 ஆம் திகதி வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இந்த முடிவு வெளிப்படுத்தப்பட்டது.
“2008இல் செயற்படுத்தப்பட்ட இந்தத் திட்டத்தில், ஒரு ராடர் அமைப்புக்காக சுமார் 402 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது.
இதில் 323 மில்லியன் ரூபாவினை உலக வானிலை அமைப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.
இந்தத் திட்டத்தை இலங்கைக்கு கொண்டு வருவதற்கு முன்னர் வளிமண்டலவியல் திணைக்களத்தின் அதிகாரி ஒருவர் இந்த இயந்திரத்தை பரிசோதித்து, அது வேலை செய்யும் நிலையில் இல்லாததால் அதனை இலங்கைக்குக் கொண்டு வர வேண்டாம் என தெரிவித்ததாகவும் தெரியவந்துள்ளது.
குறித்த இடத்திற்கான வீதியை தயார் செய்து பல வருடங்கள் கடந்துள்ள நிலையில் குறித்த உபகரணங்களும் பழுதடைந்துள்ளதாக கணக்காய்வாளர் திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.