கோழி இறைச்சி மற்றும் முட்டை விலைகளை குறைக்க நடவடிக்கை.
எதிர்காலத்தில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியை 1200 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும் என கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார்.
தற்போது, சோளத்திற்கான இறக்குமதி வரியை குறைப்பதற்கான அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளமையினாலேயே இத்தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
“இதுகுறித்து மேலும் அவர் தெரிவிக்கையில், இரண்டு வாரங்களுக்குள் சோளத்தை இறக்குமதி செய்ய வாய்ப்புள்ளது.
இந்த சலுகைகள் மூலம் எதிர்காலத்தில் ஒரு முட்டையை 40 ரூபாவிற்கு விற்பனை செய்ய முடியும்” என்றார்.