குடிநீர் குறித்து அரசாங்கத்தின் அதிரடி தீர்மானம்!
குடிநீரின் தேவையை அத்தியாவசிய அவசர நிலையாக கருதுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
இதன்படி, அவசர நடவடிக்கை குழுவின் ஊடாக ஒன்றிணைந்த விரைவான வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நீர் வழங்கல், நீர்ப்பாசனம், அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுக்கள் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துகின்றன.
மேற்படி மூன்று அமைச்சுக்களின் செயலாளர்களை இந்தக் குழு உள்ளடக்கியுள்ள நிலையில் , குறித்த அனைத்து நிறுவனங்களும் இதில் ஈடுபடுத்தப்படவுள்ளன.