வெளியான உயர் தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

வெளியான உயர் தர பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் கல்வி அமைச்சின் விசேட அறிவிப்பு

2022 (2023) ஆண்டில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய விண்ணப்பதாரர்களில் 166,938 பேர் இந்த ஆண்டு பல்கலைக்கழக அனுமதிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இவ்வாறு தகுதி பெற்றவர்களில் 149,487 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 17,451 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இவ்வருடம் 59 பாடசாலை விண்ணப்பதாரிகளின் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுடன், 25 தனியார் விண்ணப்பதாரிகளின் பெறுபேறுகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

2022(2023) ஆண்டில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய விண்ணப்பதாரர்களின் எண்ணிக்கை 263,933 ஆகும்.

இதேவேளை, 2022(2023)ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய பரீட்சார்த்திகள் மாத்திரம் 2023 உயர்தரப் பரீட்சைக்கு மீண்டும் தோற்றுவதற்கு விரும்பினால், செப்டம்பர் 11 முதல் செப்டம்பர் 16 வரை https://onlineexams.gov.lk/eic ஊடாக மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இதேவேளை, பெறுபேறுகளின் மீள் திருத்த்திற்கு https://onlineexams.gov.lk/eic என்ற ஊடாக செப்டம்பர் 07ஆம் திகதி முதல் 16ஆம் திகதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு உள்ளது.

அத்துடன், பெறுபேறுகள் வெளியிடப்பட்ட 24 மணித்தியாலங்களுக்குள், அனைத்து பாடசாலை மற்றும் தனியார் விண்ணப்பதாரர்களும் https://onlineexams.gov.lk/eic ஐ அணுகி தேசிய அடையாள அட்டை இலக்கத்தை உள்ளிடுவதன் மூலம் பெறுபேறுகளை பதிவிறக்கம் செய்ய வசதி செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button