கட்டுநாயக்க விமான நிலைய உயிரியல் ஆய்வுக்கூடம் செயலிழப்பு!

கட்டுநாயக்க விமான நிலைய உயிரியல் ஆய்வுக்கூடம் செயலிழப்பு - இலங்கைக்கு காத்திருக்கும் ஆபத்து | Sri Lanka To Import Test Kits Detect Nipah Virus

கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள உயிரியல் ஆய்வுக்கூடம் செயலிழந்துள்ளதாக சுகாதார வல்லுநர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் இதனைத் தெரிவித்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை மற்றும் முல்லேரிய வைத்தியசாலையின் இரண்டாம் நிலை உயிரியல் ஆய்வு கூடங்கள் தற்போது பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

இந்தியாவின் கேரளாவில் நிபா வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில், இலங்கையிலும் பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் நிறுவப்பட்டுள்ள உயிரியல் ஆய்வுக்கூடம் செயலிழந்துள்ளதாக தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவளை, ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன, நாடு மூடப்படும் அபாயம் இல்லை எனவும், மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.

1999ஆம் ஆண்டு மலேசியாவில் முதன்முதலில் கண்டறியப்பட்ட நிபா வைரஸ், சமீப காலமாக இந்தியாவில் பரவி வருகின்றது. அதில் 6 பேர் வைரஸால் பாதிக்கப்பட்டிருப்பது மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இரண்டு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button