பெட்ரோல், டீசல் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி : அறிமுகமாகிறது புதிய திட்டம்
தெற்கு அவுஸ்திடீரலியாவின் வையல்லா பகுதியில் புதிய ஹைட்ரஜன் மையம் அமைக்க அந்த நாட்டின் அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
கான்பெரா, காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க உலக நாடுகள் பலவும் புதுப்பிக்கத்தக்க ஆற்றலுக்கு மாறி வருகின்றமையை கருத்திற் கொண்டே மேற்படி தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
அந்தவகையில், இதற்காக சுமார் 533 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்வதாக, அந்த நாட்டின் பிரதமர் அந்தோனி அல்பானீஸ் அறிவித்துள்ளார்.
இதன் மூலம் 2030-க்குள் ஆண்டுதோறும் 18 லட்சம் டொன் ஹைட்ரஜன் உருவாக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.